காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை 3 நாள் சோதனை நிறைவு

பெல்லாரி : பிப்ரவரி. 12 – நகரின் சட்டமன்ற உறுப்பினர் நாரா பரத் ரெட்டி மற்றும் அவருடைய குடும்பத்தார் உறவினர்கள் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 9 அன்று காலை 6 மணியளவில் பெங்களூருவிலுருந்து கிளம்பிய 20 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பரத் ரெட்டி , அவருடைடிய சித்தப்பா , பிரதாப் ரெட்டி மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தியுள்ளனர். அன்று மாலை சோதனைகள் முடிந்த பின்னர் காந்திநகரில் உள்ள நாரா பரத் ரெட்டிக்கு சொந்தமான ராகவேந்திரா அலுவலகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 10 மணிவரை இந்த சோதனைகள் நடந்துள்ளது. பின்னர் ஹார்ட் டிஸ்க் பத்திரங்களில் முன்னாள் சட்டசபை உறுப்பினர் சூர்யநாராயண ரெட்டி ஆகியோரின் கையொப்பத்தை பெற்று நான்கு பைகளில் ஆவணகளை அமலாகாதுறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். இவை அனைத்தும் ராகவேந்திரா என்டர்ப்ரை ஸஸ் நிறுவனத்திற்கு சம்மந்தப்பட்ட ஊழல்கள் என தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறையினர் இரண்டாவது முறையாக பெல்லாரியில் மேற்கொண்ட சோதனை இதுவாகும். இதற்க்கு முன்னர் சட்ட விரோத குவாரி தொழில் , சட்ட விரோத பண பறிமாற்றங்கள், ஆகிய விஷயங்கள் தொடர்பாக சி பி ஐ மற்றும் வருமானத்துறையினர் சோதனைகள் நடத்தி ஓ எம் சி நிறுவனத்தின் மீது வழக்குகள் பதிவு செய்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.