காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

அரியானா, செப். 15- அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிசத் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மோதல் வெடித்து, பின்னர் வன்முறையாக மாறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்மான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். வன்முறை தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-ல் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மம்மான் கான் பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த தகவலை சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்டாப் அகமது உறுதி செய்துள்ளார்.