காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி, ஜூன்.3-
சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கூறினார். தற்போது வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.