காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முதல்வர் காட்டம்

பெலகாவி : நவம்பர் 9 – காங்கிரசின் துராட்சி மற்றும் அவர்களின் துர்பாக்கியம் மாநில மக்களுக்கு இனி தேவையில்லை என்றாகியுள்ளது என மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்த போது தங்கள் சுய லாபத்துக்காக மற்றும் தங்களுக்கென செய்துகொள்ளுகிறார்கள் . இந்த நிலையில் மக்கள் மீண்டும் பி ஜே பி கட்சியை ஆட்சிக்கு வரவழைக்கும் உறுதியை கொண்டுள்ளனர் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். ராயபாகில் பி ஜே பி சார்பில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் ஒருங்கிணைப்பு யாத்திரையை துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில் 60 ஆண்டுகள் காங்கிரசின் ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர் . இவர்களின் எவ்வித திட்டங்களும் மக்களை சென்றடைய வில்லை . காங்கிரசின் ஆட்சி திறமின்மை மற்றும் அவர்களின் துர்பாக்கியம் மக்களுக்கு தேவையில்லாமல் போயுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய பி ஜே பி அரசின் அரிசி மூட்டைகள் மீது சித்தராமையா தன்னுடைய புகைப்படத்தை அச்சிட்டு சோற்றுக்குள்ளேயே திருட்டை நடத்துவதன் வாயிலாக அதிலும் லூட்டி அடித்தார். சிறு நீர்ப்பாசன துறை திட்ட பணிகளில் திட்டப்பணிகள் நடக்காமலேயே பில்களை பெற்றுள்ளனர். பெங்களூர் , மங்களூர் , பெல்லாரி ஆகிய மாவட்டங்களில் மணல்களிலிருந்தும் தின்றுள்ளனர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் மாநில மக்களை அதோகதிக்கு எடுத்து சென்றனர். இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை காட்டமாக தெரிவித்துள்ளார்.