காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

டெல்லி: மார்ச்.18-
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்; டெல்லியில் நாளை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு வெளியிடப்படும் என கூறினார்.
ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, அதிகபட்ச இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதற்கும் ஒப்புதல் பெறப்படுகிறது. 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.400-ஆக உயர்த்தும் தேர்தல் வாக்குறுதிக்கும் ஒப்புதல் பெறப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலுக்கும் ஒப்புதல் பெறப்படுகிறது