காங்கிரஸ் கூட்டத்தில் டி கே சிவகுமார்எம் பி பாட்டீல் சமரசம்

பெங்களூர் : மே . 13 -காங்கிரஸ் தலைவர்களின் சண்டைகள் வீதிக்கு வந்ததே போதுமென்று தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் டி கே சிவகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் எம் பி பாட்டில் ஒருங்கிணைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் உதய்ப்பூரில் நடந்துவரும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனா மந்தனா கூட்டத்தில் இவ்விரு தலைவர்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவ்விருவரும் ஏதோ விஷயத்தை பேசியபடி தோள்களில் கை போட்டபடி நெருக்கமாயுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரம்யா ட்வீட் விஷயமாக யாரும் பத்திரிக்கை அறிக்கைகள் விடுக்ககூடாதென மேலிடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரசின் இரு பிரமுகர்களும் தங்கள் பேத பாவங்களை மறக்க முடிவு செய்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .சமீபத்தில் மாநில உயர் கல்வி துறை அமைச்சர் அஸ்வதநாராயணா மற்றும் தேர்தல் பிரசார குழு தலைவர் எம் பி பாட்டில் இருவரும் சந்தித்துள்ளது குறித்து மாநில கட்சி தலைவர் டி கே சிவகுமார் பகிரங்கப்படுத்தினார். ஆனால் இது குறித்து எம் பி பாட்டில் பெரும் அதிருப்த்தியை வெளிப்படுத்தியுள்ளார்.