காங்கிரஸ் தலைவர்கள் மீது அமைச்சர் சுதாகர் குற்றச்சாட்டு

பெங்களூர்: நவம்பர். 18 – ஜாதி கணக்கெடுப்பு விவரங்களை சட்டத்துக்கு புறம்பாக அனைத்து மாவட்டங்களில் அவர்களுக்கு தேவைப்பட்டவர்களுக்கு கசிய விடப்பட்டுள்ளது. இதற்க்கு காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பேற்க்க தயாரா என மாநில மருத்துவ கல்வி துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே அறிக்கை விவங்களை கசிய விட்டுள்ளதாக சுதாகர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் சாதாரண விஷயங்களை பெரிது படுத்துவது , தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஆகியவற்றை காங்கிரஸ் தலைவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது காந்தராஜூ என்பவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு இதற்க்கு 130 கோடி ரூபாய்கள் செலவு செய்து ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த அறிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிடாமல் வெறும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டது என மருத்துவ கல்வி துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.