காங்கிரஸ் தேர்தல் குழுக்கள் அமைப்பு

புதுடெல்லி,ஜன.7-
பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியை உயர்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள ஏழு மாநிலங்கள் 7 மாநிலங்களின் தேர்தலிலும் வெற்றி பெற காய் நகர்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது 8 மாநிலங்களில் காங்கிரஸ் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மத்தியப் பிரதேசத்திற்கான அரசியல் விவகாரக் குழுவைத் தவிர, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான தேர்தல் கமிட்டிகளையும் காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் பிரதேச தேர்தல் கமிட்டிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பிரதேச தேர்தல் கமிட்டி மற்றும் அரசியல் விவகாரக் குழு ஆகியவற்றின் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் மாநில பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மாநிலத்தின் பிரதேச எலெ கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநில பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மாநிலத்தில் பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மகேந்திரஜீத் சிங் மால்வியா, மோகன் பிரகாஷ், சி பி ஜோஷி, ஹரிஷ் சவுத்ரி, ராம்லால் ஜாட், பிரமோத் ஜெயின் பயா, பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், மம்தா பூபேஷ், பஜன் லால் ஜாதவ், முராரி லால் மீனா, அசோக் சந்த்னா, நீரஜ் டாங்கி, ஜுபைர் கான், தீரஜ் ஷர்ஜார், ரோஹித் போஹ்ரா, இந்திரா மீனா, துங்கர் ராம் கெதர், சிம்லா தேவி நாயக் மற்றும் லலித் யாதவ் ஆகியோரும் இதே குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களைத் தவிர, இளைஞர் காங்கிரஸ் தலைவர், என்எஸயூஐ தலைவர், சேவா தளத்தின் தலைமை அமைப்பாளர், பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
[கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதற்கிடையே, இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.அதே நேரம், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நடவடிக்கை எடுத்திருந்தார். அதன்படி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்த பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டிருந்தார். மேலும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டிருந்தார். அதே போல், பல்வேறு மாநிலங்களில் புதிய பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்திருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சசிகாந்த் செந்தில் தலைமையில் செயல் திட்டக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. அதன்படி, தேர்தல் செயல்திட்ட குழு துணைத் தலைவர்களாக கோகுல் புடைய்ல், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தலை ஒட்டிய தகவல் தொடர்பு பணிக்குழுவின் தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.