காங்கிரஸ் பந்த் போராட்டம் முதல்வர் கடும் விமர்சனம்

ஹூப்ளி மார்ச் 6
கர்நாடக மாநிலத்தில் தலை விரித்தாடும் ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றை கண்டித்து மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் ஒன்பதாம் தேதி 2 மணி நேர பன் போராட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் பிரசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக இன்று அவர் கூறியதாவது. லஞ்சம் ஊழல் என்றால் காங்கிரஸ் கட்சி தான் என்பது மக்களுக்கு தெரியும். கர்நாடக மாநில முதல் அமைச்சராக சித்ராமையா இருந்தபோது அனைத்து துறைகளிலும் ஊழல் லஞ்சம் தலைவிரித்து ஆடியது. அவர் ஒவ்வொரு மந்திரிக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இலக்கு வைத்து இருந்தார். லஞ்ச ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அப்படிப்பட்டவர்கள் இன்று கர்நாடக பிஜேபி அரசில் லஞ்சம் ஊழல் இருப்பதாக கூறி பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் இந்த பந்த் போராட்டம் படுதோல்வி அடையும் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது. என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார் .

இதற்கிடையே கர்நாடக மாநில பிஜேபி எம்எல்ஏ மகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பண விவகாரத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்த மாநில காங்கிரஸ் கட்சி தீர்மானித்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது