
பெங்களூர், மே.25 –
காங்கிரஸ் நிர்வாகி ஒருவரை ரவுடி கும்பல் ஓட ஓட வெட்டி சாய்த்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடந்தது. சினிமாவில் வருவது போல் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகொலை செய்யப்பட்டவர் பெயர் ரவி என்கிற மத்தி ரவி. இவர் நந்தினி லே-அவுட்டில் வசித்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு ரவுடி கும்பல் ஒன்று இவரை லக்கரே அருகில் சவுடேஸ்வரி நகரில் உள்ள ஹள்ளி ருச்சி ஓட்டல் அருகில் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளது. கொலையாளிகள் தலைமறைவாகி விட்டனர் அவர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். குற்றவாளிகள் தற்போது தலைமறைவாயுள்ளதாக டி சி பி சிவப்ரகாஷ் தேவராஜ் தெரிவித்தார். டெம்போ ட்ராவலர்ஸ் ஓட்டுனராயிருந்த மத்திரவியை கொலை செய்ய மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்தாறு பேர் காத்திருந்தனர். வேலை முடித்து கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு வந்த ரவி இரவு வீட்டுக்கு வீட்டுக்கு வெளியே வந்த போது திடீரென அவனை தாக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஓடிய ரவியை துரத்தி பிடித்து சி எம் ஹெச் பார் அருகில் தாக்கியுள்ளனர் பின்னர் ஹள்ளிருசி ஓட்டல் அருகில் மீண்டும் ஆயுதங்களால் ரவியை தாக்கியுள்ளனர். பின்னர் அவன் தலை மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் இதற்க்கு முன்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளெக்ஸ் பேனரில் இருந்த ரவியின் படத்தை கிழித்து எரித்துள்ளனர். தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த நந்தினி லே அவுட் போலீசார் இடத்தை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ரவியின் உடல் தற்போது உடற்கூறு சோதைக்காக விக்ட்டோரியா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த கொலையால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.