காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சிக்கமகளூரு : நவம்பர். 17 – காங்கிரஸ் பிரமுகர் காயத்ரி ஷாந்தேகௌடா வீட்டில் இன்று காலை முதல் வருமான வரி துறையினர் சோதணை நடத்தி வருகின்றனர். நகரின் பூ மார்க்கெட் வீதியில் உள்ள காயத்ரி ஷாந்தேஹௌடா வீட்டில் அதிகாலை முதல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பரிசீலித்து வருகின்றனர். அதிகாரிகள் வந்த வாகனங்களின் முற்பகுதியில் கண்ணாடி மீது திருமண பெயர்ப்பலகை உள்ளது. எவருக்கும் சந்தேகம் வரக்கூடாத வகையில் அபினவ் மற்றும் தீபிகா திருமணம் என்ற போஸ்ட்டர்கள் ஒட்டிய வாகனத்தில் வருமான வரி துறை அதிகாரிகள் வந்துள்ளனர். காயத்ரியின் கணவர் ஷாந்தேகௌடா குத்தகையாளராவார். கலச்சாபுரா வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான கல் அரைப்பு நிறுவனத்திலும் வருமான வரி துறை சோதனைகள் நடந்து வருகிறது. இந்த சோதனைகளின் போது காயத்ரி ஷாந்தேகௌடாவுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். ஹாசன் மாவட்டத்தின் பேலூரில் உள்ள காயத்ரியின் மருமகன் சந்தோஷ் வீட்டிலும் ஒரே நேரத்தில் வருமான வரி துறை சோதனைகள் நடந்து வருகிறது. பேலூர் பட்டணத்தில் உள்ள சென்னகேசவகௌடா வீதியில் உள்ள சந்தோஷுக்கு சொந்தமான வீடுகள், திருமண மண்டபம் ஆகியவற்றின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ,