காங்கிரஸ் மீது சி.டி. ரவி குற்றச்சாட்டு

பெங்களூர் : ஜூலை 17 – காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி , ராகுல் காந்தி , ஆகியோர் அப்பாவிகளல்ல , ஆனால் மக்களை சேர்த்துக்கொண்டு ஹெரால்ட் மோசடி விவகாரத்தை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என பி ஜே பி தேசிய பொதுச்செயலாளர் சி டி ரவி குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தி வருகிறது. காங்கிரஸ்ஸாருக்கு அரசியல் சாசன விதிமுறைகள் பற்றி அக்கறையில்லை. அப்படி அதன் மீது மதிப்பிருந்தால் அமலாக்கத்துறை நோட்டீசை ஏன் வழங்கியுள்ளது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் காங்கிரஸ் யாருடையதோ பணம் , அதில் எல்லாமாவின் யாத்திரை என ஹெரால்ட் விஷயத்தில் நடந்து கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை அரசியல் சட்ட விதிகளின்படி சோதனைகள் விசாரணைகள நடத்தி வருகிறது. மோதி மீது குற்றச்சாட்டு வந்த போது இதே அமலாக்கத்துறை எப்படி நடந்து கொண்டது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . தொடர்ந்து ஏழு மணிநேரம் மோதி அவர்கள் எஸ் ஐ டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காங்கிரஸரைப்போல் மோதி நாடகம் ஆட வில்லை. பெரும்பாலான எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தொகுதிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தவிர பலர் தொகுதி அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். தத்தங்கள் தொகுதிகளில் மக்களுக்கு எவ்வித இடையூறும் நேராத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சி டி ரவி தெரிவித்துள்ளார்.