காங்கிரஸ் மேலிடம் பணம் கேட்கவில்லை

பெங்களூர்,அக்.16-

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு கர்நாடக மாநிலம் குறிப்பாக பெங்களூரில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுவதாக பிஜேபி கூறி வரும் குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்திராமையா மறுப்பு தெரிவித்தார். இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற குற்றச்சாட்டு வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் கோபமுடன் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறும் போது காங்கிரஸ் மேலிடம் எங்களிடம் நையா பைசா கேட்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்

மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து மாநில தேர்தலுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? தேர்தலின் போது நாங்கள் எப்போதாவது வேறு மாநிலங்களுக்கு சென்று பணம் கேட்டு இருக்கிறோமா? மக்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளனர்.  நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம்.  தற்போது 5 மாநிலங்களுக்கு நாங்கள் பணம் வழங்குவதாக பிஜேபி கட்சியினர் ஆதாரம் மற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஒப்பந்ததாரரின் வீட்டில் பணம் சிக்கியது. அவர்  பிஜேபி காண்ட்ராக்டரா, காங்கிரஸ் காண்ட்ராக்டரா? வருமான வரி சோதனைக்கு ஆளானவர்களும் காங்கிரஸ் காண்டிராக்டர்கள்தான் என்று சொல்ல என்ன ஆதாரம் என்று ஆவேசமாக கேட்டார்.

 வருமான வரித்துறையின் சோதனை சகஜம்.  

ஐந்து மாநில தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல்களை அடுத்து வருமான வரி சோதனையை  பாஜக அரசியலாக்குகிறது.  

ஐந்து மாநில தேர்தல் செலவுக்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா 1000 கோடியும்  துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 2 ஆயிரம் கோடியும். பணம் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை காங்கிரஸ் மேலிடம் கொடுத்துள்ளது என்ற பாஜக தலைவர் சி.டி.  ரவியின் கருத்துக்கு நான் பதிலளிக்கவில்லை.  வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.  எங்களிடம் எந்தப் பணமும் தரும்படி மேலிடம் கேட்கவில்லை.  இவை அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்?   வெறுமனே எதையாவது பேசி, அரசியல் ரீதியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியல்ல. மக்களுக்கு எல்லாம் தெரியும்.  பாஜகவை மக்கள் நம்பவில்லை என்றும், வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறும் போது கர்நாடக மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் பிஜேபியின் போராட்டம் எடுபடாது என்றார்