காங்கிரஸ் விமர்சனம்

பெங்களூரு,: ஜனவரி. 9 – கர்நாடக மாநிலத்தில்
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் பட்டியலின/பழங்குடியின சமூக மக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கார்கே, பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தார். இது தொடர்பாக கார்கே கூறுகையில், ஜனநாயகத்தில் ஒருநபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். இது மாறவேண்டும். ஜாதி மதம் அடிப்படையில் கர்நாடகாவை பாஜக பிரிக்கிறது.