காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு – டி.கே. சிவகுமார்

ஹூப்ளி, மார்ச் 6:
டெல்லியில் மார்ச் 7 ஆம் தேதி அக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறும் என்றும், மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார்.
அவர் புதன்கிழமை ஹூப்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்ததற்கு ஜெகதீஷ் ஷெட்டர் வருத்தம் தெரிவித்து விரைவில் அறிக்கை அளிப்பார் என்று கிண்டலாக கூறினார். ‘இன்னும் ஒரு மாதம் பொறுங்கள். அவர்களிடமிருந்து மனந்திரும்புதல் அறிக்கை வரும்’ என்றார்.
மகதாயி திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே டெண்டர் கோரினோம். அமைச்சர் பிரஹலாத ஜோஷி, மத்திய அரசிடம் இருந்து ஆட்சேபனை இல்லை என்ற கடிதத்தை பெற்று தரட்டும் என்றார். ஹூப்ளி விமான நிலையத்தில் டி.கே.சிவகுமார் இறங்கியதும், ‘அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு ஜெய் என்று அவரது ஆதரவாலர்கள் முழக்கமிட்டனர். அப்போது அமைச்சர்கள் சந்தோஷ் லாட், பிரியங்கா கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.