காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் – கார்கே ஆலோசனை

புதுடெல்லி,மார்ச்.11-
2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 2-ந்தேதி வெளியிட்டது. அக்கட்சியின் பொது செயலாளர் வினோத் தாவடே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில்
கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், அரியானா, தமிழகம், புதுடெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், சத்தீஷ்கார், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.