காசி தமிழ் சங்கமம் விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்பு

காசி, நவ. 25- காசி இந்து பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தெலுங்கானா புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது பின்னர் தமிழிசை கூறியதன் பெயரில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது நிகழ்ச்சி வந்திருந்த தமிழர்கள் அனைவரும் இந்த பாடலை பாடினார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழர்கள இந்த பாடலை சேர்ந்து பாடினார்கள்.வடநாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை.ஆனால் தமிழிசை முயற்சி காரணமாக முதல்முறையாக காசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சியில் பாடப்பட்டுள்ளது இதனை அனைவரும் பாராட்டினார்கள் மேலும் தமிழிசை பேசும்போது புதுவை மாநிலத்திற்கான தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவரே இசையோடு பாடி கைதட்டல் பெற்றார்.