காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை2 ரவுடிகள் என்கவுண்டர்

காஞ்சிபுரம்:டிசம்பர் 27 கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரவுடிகள் காஞ்சிபுரம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி போன்ற பகுதிகளில் உள்ள ரவுடிகள் மீது காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிபயங்கர ரவுடிகள் மீது என்கவுன்டர் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலையில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா(35) என்கிற சரவணன். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்லவர் மேடு பகுதியில் குட்டி ரவுடியாக வலம் வந்த பிரபா, அவ்வப்போது சிறைக்கு செல்வதும் ஜாமினில் வெளி வருவதுமாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் பிரபாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது தப்பி ஓடியதில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிளேடு வைக்கப்பட்டுள்ளது. ஜாமினில் வெளியே வந்த பிரபா காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், ஆஜராவதற்காக பல்லவர் மேடு பகுதியில் இருந்து நடந்து சென்றார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை இடிப்பது போன்று வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட பிரபா அங்கிருந்து ஓட முயற்சி செய்தார். காலில் அறுவை சிகிச்சை செய்ததால் வேகமாக ஓட முடியாத பிரபா அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டார். ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப் பகலில் சாலையில் வைத்து பிரபாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.