காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

மைசூர் :செப்டம்பர் . 2 – பயிர்களை காக்க சென்ற விவசாயியை காட்டு யானை தாக்கியுள்ள சம்பவம் மாவட்டத்தின் சரகூறு தாலூகாவின் குந்தூரு கிராமத்தின் புறப்பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளது . யானை தாக்குகியதால் விவசாயி சித்தராஜநாயகா (35) என்பவர் படுகாயங்களடைந்து தாலூகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன .
குந்தூரு கிராமத்தின் புறப்பகுதியில் தன்னுடைய நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை பாதுகாக்க நேற்று இரவு சித்தராஜு சென்றிருந்த போது காட்டு யானை இவரை தாக்கியதில் பலத்த காயங்களடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உடனேயே வீட்டார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவரை தாலூகா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.மைசூர் சாமராஜ்நகர் உட்பட சில மாவட்டங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 13 முதல் 10 நாட்களில் காட்டு யானைகளின் தாக்குதல்களால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கவலை தெரிவித்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே காட்டு எல்லை பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கும் வகையில் வன அதிகாரிகள் இவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். வன விலங்குகளால் மனித உயிர்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது
அதே போல் நிலத்திற்கு பயன்படுத்திய மின்சார வேலிகலாள் காட்டு யானைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது . இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் நிலங்கள் அருகில் யானைகள் தென்படும் போது அவற்றை காட்டுக்குள் திருப்பி அனுப்பவும் தெரிவிக்கவும் இது தொடர்பாக உயிர் சேதங்களை தவிர்க்கவும் அமைச்சர் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

தவிர யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள சாமராஜநகர் மற்றும் குடகு மாவட்டங்களில் காட்டு யானைகளை udane காட்டுக்குள் திருப்பி அனுப்ப பயன்படுத்தும் கும்கி யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஈஸ்வர் கண்ட்ரே அறிவுறுத்தியுள்ளார்.