காட்டு யானை தாக்கி இளைஞர் சாவு

மைசூர் : அக்டோபர் . 27 – வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரிகரித்துள்ள நிலையில் ஹுனசூரு தாலூக்காவின் வீரனஹோசஹள்ளியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் யானை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வீரன ஹோசஹள்ளி கிராமத்தை சேர்ந்த வசந்த் (36) என தெரிய வந்துள்ளது. வசந்த் வேலை விஷயமாக சென்றுகொண்டிருந்தபோதே யானை தாக்கியதில் படு காயங்களடைந்து அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்க்கு வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தியிருப்பதுடன் ஹுனஸூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவாகியுள்ளது. சமீபகாலமாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் இதனால் வயது பயந்து வாழ்க்கையை நடத்த வேண்டி இருப்பதாகவும் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான ஆகாரம் கிடைக்காத பட்சத்தில் அவைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படை எடுத்து வருகின்றன இந்த பிரச்சனைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் யானைகள் இடம் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப் பகுதிகளை விட்டு வெளியே வராதபடி யானைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மக்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.