காட்டு யானை தாக்கி மூதாட்டி சாவு

மடிகேரி : ஆகஸ்ட். 22 – காட்டு யானையின் தாக்குதலுக்கு சிக்கி மூதாட்டி ஒருவர் இறந்துள்ள சம்பவம் குடகு மாவட்டத்தின் சித்தாபுரா அருகில் உள்ள படகா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஆயிஷா (63) என்பவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார் . வீட்டின் அருகில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் காட்டு யானை இவரை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஆயிஷா அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வன துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் நடந்த காட்டு யானைகளின் தாக்குதல் இது இரண்டாவது முறையாகும். சில நாட்களுக்கு முன்னர்தான் தெற்கு குடகு மாவட்டத்தில் அறேகாடு yendra பகுதியில் கட்டே மாடு தேவப்பா (58) என்பவர் காட்டு யானை தாக்கி வியந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. இது நடந்த ஒரே வாரத்தில் மீண்டும் காட்டு யானை தாக்கி ஆயிஷா உயிரிழந்துள்ளார். ஒரே வாரத்தில் இரண்டு பேர் காட்டு யானை தாக்கி இறந்திருப்பது குறித்து கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர் . மனித மற்றும் வன விலங்குகள் மோதலாய் தவிர்க்க வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக கிராம மக்கள் குற்றங்சாட்டியுள்ளனர். தவிர போக்கிரி யானையை பிடிக்குமாறும் இவர்கள் வற்புறுத்தியுள்ளார். அதே போல் தலைமை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு வரவேண்டும் என்றும் gகிராம மக்கள் வற்புறுத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு பின்னர் மடிகேரி வனத்துறை அதிகாரி ஏ டி பூவய்யா மற்றும் விராஜ்பேட் வனத்துறை அதிகாரி ஷரணப்பா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர் . அப்போது யானையை பிடிப்பதாக மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழை நின்றபின்னர் சூரிய மின்சார வேலிகள் அமைப்பதாகவும். உறுதியாய்த்துள்ளனர். சில இடங்களில் கேட்கள் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கேட்கள் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் கிராமத்தார் பல சமயங்களில் தங்கள் பயணங்களின் போது கேட்டை திறந்து விடுகின்றனர். இதனால் இது போன்ற விபத்துக்கள் நடக்கின்றன. தவிர காட்டு யானைகளின் வரவை தடுக்க சிமெண்ட் சுற்றுச்சுவர் அமைக்கவும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என ஷரணப்பா தெரிவித்தார். தவிர இரண்டு யானைகளை பிடிக்க அனுமதியும் கிடைத்துள்ளது. கடந்த வாரம் ஒரு யானை பிடிக்கப்பட்டிருப்பதுடன் மற்றொரு யானையை விரைவில் பிடிப்போம் என்றும் ஷரணப்பா தெரிவித்தார்.