காட்டு யானை தாக்கி விவசாயி பலி

பெங்களூர் : டிசம்பர். 29 – பன்னேர்கட்டா தேசிய பூங்கா பகுதியின் கோடிஹள்ளி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்ப்பவர் ஒருவர் இறந்துள்ளார். முகோடலு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரய்யா (50) என்பவர் இந்த சம்பவத்தில் உயிரியிழந்தவர்.கால்நடைகளை மேய்க்க அழைத்து சென்றுகொண்டிருந்தபோது யானை இவரை தாக்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த சாவு நடந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தாலும் இவருடைய உடற்கூறு பரிசோதனை அறிக்கைக்காக வனத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர். வனப்பகுதியில் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யானையின் தாக்குதலால் இவர் இறந்தார் என்பது உறுதியானால் நிவாரண தொகை வழங்கப்படும் என வன துறையினர் தெரிவித்துள்ளனர். இதே வேளையில் ஹோசக்கூறு கட்டஹள்ளி அருகில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுத்தை தென்பட்டதாக கிராமத்தார் தெரிவித்துள்ளனர். இந்த இடத்தில் சிறுத்தையின் கால் தடயங்கள் பதிவாகியுள்ளன. இந்த பகுதி வன பகுதிக்கு நெருக்கமானது என்பதால் சிறுத்தை தூரம் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.