
பெங்களூர் : மார்ச் . 1 -ஒன்பது நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த கூலி தொழிலாளி ஒருவரின் இறந்த உடல் பின்னி மில் பகுதியில் அவருடைய வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது . பின்னி மில் பகுதியின் மார்க்கண்டேயா லே அவுட் வாசியான மதுசூதன் (33) என்பவர் இறந்துள்ளவர். கால்வாய் நீர் சரியாக போகாததால் சோதணை மேற்கொண்ட பின்னர் இவருடைய உடல் அங்கு கிடைத்துள்ளது. தன்னுடைய மனைவி சுஷ்மிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கி இருந்த மதுசூதன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். விபரீத குடி போதைக்கு அடிமையாகியிருந்த மதுசூதன் வீட்டுக்கு வராமல் கடந்த பிப்ரவரி 19 முதல் காணாமல் போயிருந்துள்ளார். தன்னுடைய கணவனை சுஷ்மிதா பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளார் . கடைசியில் தன்னுடைய கணவன் எங்கும் கிடைக்காத நிலையில் அவர் நேற்று இரவு ஜெ ஜெ நகர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் அவருடைய வீட்டின் அருகில் உள்ள கால்வாயிலேயே மதுசூதனின் இறந்த உடல் கிடைத்துள்ளது. இந்த கால்வாயின் மீது கல் சப்படிகள் போட்டிருந்ததால் யாருக்கும் இந்த உடல் தெரிந்திருக்கவில்லை. கால்வாயில் நீர் சரியாக போகாத நிலையில் மற்றும் துர்நாற்றமும் வந்த நிலையில் உள்ளூர் வாசிகள் சப்படி கற்களை நீக்கி பார்த்தபோது மதுசூதன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.