காணாமல் போன கர்ப்பிணி மனைவி – கண்ணீருடன் தேடும் கணவர்

பெங்களூரு, ஜனவரி 14-
பெங்களூரில் கர்ப்பிணி மனைவி திடீரென காணாமல் போனார் இதனால் அவரை தேடி கணவர் கண்ணீருடன் அலைந்து வருகிறார்.மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் 5 வயது குழந்தையை விட்டுவிட்டு கர்ப்பிணிப் பெண் காணாமல் போனார். இவர் தாவரேகெரே காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமத் லே அவுட்டில் வசித்து வந்தவர். இவரது பெயர் ஷாலினி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். திடீரென மனைவி காணாமல் போனதால் கணவர் பரிதவித்து அவரை தேடி வருகிறார். மனைவி காணாமல் போனது குறித்து
தாவரேகெரே போலீசில் புகார் அளித்துள்ளார்.
வழக்கம் போல் காலை 6 மணிக்கு பால் வாங்கி வர 30 ரூபாயை எடுத்து சென்ற ஷாலினி, 8 மணி ஆகியும் வீடு திரும்பாததால், கணவர் பீதியடைந்து தேடினார் பஸ் நிலையத்தில் விசாரித்த போது ​​மனைவி பிஎம்டிசி பஸ்சில் ஏறி சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது தெரியவந்தது
கணவர் காலை முதல் நள்ளிரவு வரை தேடினார். குடும்ப உறுப்பினர்கள் கே.ஆர்.மார்க்கெட், சாட்டிலைட் பஸ் ஸ்டாண்டிலும் தேடினர். மேலும் பஸ் ஸ்டாண்டில் தூங்கி கொண்டிருந்தவர்களிடம் சென்று விசாரித்தனர். ஆனால் அந்தப் பெண்ணை எங்கும் காணவில்லை. இதனால் ஷாலினி தனது 5 வயது மகனை எங்கே விட்டுச் சென்றுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மனைவி காணாமல் போனது குறித்து சுவாமி தாவரேகெரே காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.