காதலனுக்காக குடும்பத்தை விட்டு பாகிஸ்தான் சென்ற பெண்.. மீண்டும் இந்தியா திரும்புகிறார்

இஸ்லாமாபாத், அக். 30- ஆன்லைன் காதலுக்காகத் தனது குடும்பத்தை விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்ற பெண் திடீரென இந்தியா திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த நவீனக் காலத்தில் ஆன்லைன் மூலம் தான் எல்லாமே நடக்கிறது. ஷாப்பிங் முதல் உணவு டெலிவரி வரை இப்போது அனைத்துமே இணையம் வாயிலாகவே நடைபெறுகிறது. பல காதல் சம்பவங்களும் கூட இணையத்தில் மலர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இந்தியக் காதலனைச் சந்திக்க நேபாளம் வழியாக இந்தியா வந்திருந்தார். அது அப்போதோ பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அதேபோல பேஸ்புக் மூலம் எல்லைகளை கடந்து மலர்ந்த மற்றொரு காதல் தான் இது.. ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்த பெண் அஞ்சு. இவருக்கு அங்கே அரவிந்த் என்ற நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளான். கடந்த 2019இல் இவருக்கு பேஸ்புக் மூலம் நஸ்ருல்லா என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பேஸ்புக்கிலேயே பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் அந்த பேச்சு அப்படியே காதலாக மாறியுள்ளது. நஸ்ருல்லா பாகிஸ்தானில் இருப்பதைத் தெரிந்த அஞ்சு, அவரை திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தனது கணவரையும் மகனையும் தனியாக விட்டுவிட்டு அஞ்சு பாகிஸ்தானுக்குச் சென்றார். உரிய விசா எடுத்துவிட்டே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் அஞ்சு நஸ்ருல்லா திருமணம் நடந்துள்ளது. பாகிஸ்தான் அரசு அஞ்சுவின் விசாவை நீட்டித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதற்கிடையே 34 வயதான அஞ்சு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்ற பிறகு அஞ்சு இந்தியாவுக்கு வர உள்ளதாக அவரது பாகிஸ்தான் கணவர் தெரிவித்தார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு பாத்திமா என்று தனது பெயரை அஞ்சு மாற்றியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அவரது விசாவை ஒரு ஆண்டு நீட்டித்துள்ளது. இந்தச் சூழலில் தான் அவர் இந்தியா திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவரது பாகிஸ்தான் கணவர் நஸ்ருல்லா சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக நஸ்ருல்லா மேலும் கூறுகையில், “நாங்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளோம். அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.
இந்த பிராசஸ் நீண்ட காலம் எடுக்கும் என எங்களுக்குத் தெரியும். இந்த அனுமதி கிடைத்தவுடன் அவர் இந்தியாவுக்குச் செல்வார்.