காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

பெலகாவி : செப்டம்பர். 21 – தன் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் ராமதுர்கா தாலூகாவில் நடந்துள்ளது . ராமதுர்கா தாலூகாவின் கட்டக்கோலா என்ற கிராமத்தை சேர்ந்த பாண்டப்பா ஜடக்கன்னவரா (35) என்பவர் கொலையுண்டவர். இவருடைய மனைவி லக்ஷ்மி ஜடக்கன்னவரா ஹோசூரா கிராமத்தை சேர்ந்த ரமேஷ் படிகேரா என்பவனுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாள் . இந்த காரணத்திற்க்காக அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் நடந்து வந்துள்ளது. நேற்று இரவு பாண்டப்பா மற்றும் லக்ஷ்மிக்கிடையே மீண்டும் சண்டை நடந்துள்ளது. இந்த விஷயத்தை லக்ஷ்மி தன் கள்ளக்காதலன் ரமேஷுக்கு (29) லக்ஷ்மி தெரிவித்துள்ளாள். பின்னர் கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாள். அதன்படி ரமேஷ் லக்ஷ்மியின் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது ரமேஷ் மற்றும் பாண்டப்பாவுக்கிடையே நடந்த சண்டை விபரீதமடைந்தது. அப்போது பாண்டப்பாவின் தலை மீது லக்ஷ்மி விவசாய உபகரணத்தால் பலமாக தாக்கி உள்ளாள். தலையில் பலத்த காயமடைந்த பாண்டப்பா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்து போனான். பின்னர் லக்ஷ்மி தன் காதலனுடன் சேர்ந்து பாண்டப்பாவின் இறந்த உடலை பைக்கில் வைத்துக்கொண்டு ராமதுர்கா தாலூகாவின் ஹோசூரு புறப்பகுதியின் சிறு பாலத்தின் அருகில் வீசி எறிந்துள்ளனர் . பாண்டப்பா விபத்தில் இறந்ததாக நம்ப வைக்க என லட்சுமி தனக்கு ஏதும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று மறுநாள் தன கணவன் வீட்டுக்கு இரவு திரும்பி வரவில்லை என நாடகமாடியுளாள். பின்னர் இதுகுறித்து புகாரை பதிவு செய்து கொண்டு விசாரணையில் ஈடு பட்ட கட்டக்கோலா போலீசார் 24 மணி நேரத்திற்குள்ளாக இந்த வழக்கில் புலன் துலக்கியுள்ளனர். லக்ஷ்மி மீது சந்தேகமடைந்த போலீசார் அவளிடம் தீவிர விசாரணை நடத்தியபோது உண்மை வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து லக்ஷ்மி மற்றும் அவளுடைய கள்ள காதலன் ரமேஷ் என இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.