காதலன் குடும்பத்தார் மீது தாக்குதல்

ஹாவேரி : டிசம்பர் . 19 – பெலகாவியின் வெங்காட்டூரியில் இளம் பெண்ணும் இளைஞனும் காதலித்து இப்போது காணாமல் போயுள்ள விவகாரம் தொடர்பாக இளைஞனின் தாயை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தி கம்பத்தில் கட்டி தாக்கிய சம்பவம் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கும் நிலையில் ராணிபென்னூரிலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராணிபெண்ணூர் தாலூகாவின் முதேனூரு கிராமத்தில் காதலர்கள் இருவர் காணாமல் போன நிலையில் இளம் பெண்ணின் வீட்டார் வந்து இளைஞனின் வீட்டில் தகராறு செய்திருப்பதுடன் மாமனார் பிரஷாந்த் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பிரஷாந்தை வாகனத்தில் கடத்தி சென்று பல இடங்களில் நிறுத்தி அவருடைய துணியை அவிழ்த்து தாக்கியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. சலகேறி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மாதேனூரு கிராமத்தை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளாள் . ஆனால் இதற்க்கு இருவர் வீட்டாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மூன்று நாட்களுக்கு முன்னர் காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரிவிக்காமல் ஊரை விட்டு ஓடிப்போயுள்ளனர் . ஆனால் இதற்கு இளைஞனின் வீட்டாரின் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த இளம் பெண் வீட்டார் ஆத்திரமடைந்துள்ளனர் . எங்கள் பெண்ணை தேடி கொடுங்கள் என இளைஞன் வீட்டாரரிடம் தகராறுசெய்துள்னர். பின்னர் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இளைஞனின் குடும்பத்தாரை காரில் கடத்தி ராணிபெண்ணூரில் வெட்டு சென்ற இளம் பெண்ணின் குடும்பத்தார் இளைஞனின் மாமனார் பிரஷாந்தை அரை நிர்வாணமாக்கி அனுப்பியுள்ளனர். இது குறித்து இளைஞன் குடும்பத்தார் ராணிபெண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதே வேளையில் ஏதோ கடன் விஷயமாக இரு குடும்பத்தாருக்கும் ஏற்கெனவே தகராறுகள் நடந்துள்ளது. அது சம்மந்தமாகவும் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.