காதலர்கள் என நினைத்து அண்ணன் தங்கை மீது தாக்குதல்

பெலகாவி : ஜனவரி. 7 – காதலர்கள் என நினைத்து அண்ணன் தங்கையை மாற்று இன இளைஞர்கள் தாக்கியுள்ள சம்பவம் கோட்டே கெரே வளாகத்தில் நடந்துள்ளது. பெலகாவி தாலுகாவில் வசித்துவந்த 24 வயது இளம் பெண் மற்றும் 21 வயது இளைஞன் இருவரும் மாநில அரசின் திட்டமான யுவநிதி திட்டத்திற்கு மனு அளிக்க வந்துஇருந்தனர். இளம் பெண் முகத்தில் முக்காடு போட்டிருந்தார். இளைஞன் நெற்றியில் திலகம் வைத்திருந்தான். இவர்களை பார்த்த மாற்று இனத்தின் 16 பேர் கொண்ட கும்பல் ஹிந்து இளைஞன் மற்றும் முஸ்லீம் இளம்பெண் காதலர்கள் என தவறாக கருதி அருகில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்து 2 -3 மணிநேரம் கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் இளம் பெண்ணின் போனிலிருந்து அவளுடைய பெற்றோருக்கு போன் செய்துள்ளனர். பின்னர் குடும்பத்தார் அவர்கள் இருவரும் சகோதர சகோதரிகள் என சொல்லியம் நம்பாமல் மீண்டும் இவர்கள் இருவரை தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் நாங்கள் அன்னான் தங்கை என கூறியும் நம்பாமல் இந்த நிலையில் குடும்பத்தார் உடனே போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மொபைல் இட நிலையை ஆய்வு செய்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவர்களை மீட்டுள்ளனர். 16 பேரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளம் பெண் மற்றும் இளைஞன் இருவரும் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவிர இளம்பெண்ணின் தாய் ஹிந்து என்றும் தந்தை முஸ்லீம் என்றும் தெரியவந்துள்ளது. இளம் பெண் தன் சிற்றன்னை மகனுடன் யுவநிதி திட்டத்திற்கு மனு கொடுக்க சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.