காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருந்த நபர் கொலை

பெங்களூர் : டிசம்பர் . 6 – தான் காதலித்த பெண்ணுடன் இன்னும் ஒரு மாதத்தில் திருமணமாகவேண்டியிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை விஷமிகள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பைட்டராராயணபுரா டிம்பர் லே அவுட்டில் நேற்று இரவு நடந்துள்ளது. இந்த லே அவுட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் அருண் (24) என்பவர் கொலையுண்டவர். இவரை கொலை செய்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் அருணுக்கு அவர் காதலித்த பெண்ணுடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் 10க்கும் மேற்பட்டோர் டிம்பர் லே அவுட் அருகில் அருணை கொடூரமாக தாக்கி கொலை செய்து தப்பியோடியுள்ளனர். அருண் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்திருப்பதுடன் இரு குடும்பத்தாரின் ஒப்புதலுடன் அடுத்த மாதம் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருந்தது. இந்த கொலை குறித்து பைட்டராயணபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.