காதலியின் நிர்வாண படங்களை பகிர்ந்த காதலன் கைது

பெங்களூர் : அக்டோபர் . 11 – இங்கொரு காதலன் தன்னுடைய காதலிக்கு தானே பகையாய் இருந்து தற்போது போலீஸ் வலையில் சிக்கியுள்ளான் . இளம் பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்குவதற்காகவே ஒரு தனி ஆப்பை உருவாகியுள்ள குற்றவாளி தன்னுடைய காதலியின் நிர்வாண படங்களை உருவாக்கி அவற்றை இன்ஸ்டாங்க்ராமில் பதிவிறக்கம் செய்துள்ளான் . பின்னர் ஒன்றும் அறியாததுபோல் காதலியுடன் நடித்து போலீஸ் நிலையத்திற்கும் வந்து புகார் கொடுத்து இப்போது அவனே போலீஸ் விருந்தாளியாகியுளான். சஞ்சய் குமார் (26) என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி என்பதுடன் இவனும் இவனுடைய காதலி இருவரும் தமிழ் நாட்டின் வேலூர் நகரை சேர்ந்தவர்கள். இருவரும் ஒன்றாக நகரில் பி பிளானிங் என்ற துறையை படித்துவந்துள்ளனர். சஞ்சய் மற்றும் அவனுடைய 12 நண்பர்கள் டெலிகிராம் குழு அமைத்துக்கொண்டிருந்துள்ளனர். அதில் முதலில் அரை நிர்வாண படங்களை பதிவு செய்து வந்துள்ளனர். பின்னர் அந்த படங்களுடன் இளம் பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்குவதற்காகவே ஒரு தனி ஆப்பை சஞ்சய் உருவாகியுள்ளன. அதில் அக்கம்பக்கத்து இளம்பெண்களின் நிர்வாணப்படங்களை உருவாக்கி தன்னுடைய குழுவுடன் பகிர்ந்து ஆனந்தப்பட்டு வந்துள்ளான். இப்படி சஞ்சய் பல நூறு இளம்பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்கி அதில் தன்னுடைய காதலியின் படத்தையும் சேர்த்து இந்த க்ரூபில் பகிர்ந்து வந்துள்ளான். ஆனால் தன்னுடைய நிர்வாண படத்தை பார்த்து சஞ்சயின் காதலி அதிர்ச்சியடைந்துள்ளாள். இது குறித்து சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளாள் . புகார் அளிக்கும்போது சஞ்சய்யும் அவளுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளான். போலீசாரிடம் அப்பாவி போல் நடித்துள்ளான். புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு காதலனே தன்னுடைய காதலியின் படங்களை இன்ஸ்டார்க்ராமில் பகிர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது . இந்த நிலையில் குற்றவாளி சஞ்சய்யை போலீசார் கைது செய்திருப்பதுடன் இவனிடமிருந்து 2 மொபைல் , மடிக்கணினி , ஹார்ட் டிஸ்க் , பென் ட்ரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன . விசாரணையின் போது தான் நடத்திய லீலைகள் குறித்து குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளான்.