காதலியைக் கொன்று புதைத்து காதலன் தற்கொலை

யசுர்: ஜூன். 22 – காதலன் ஒருவன் தன் காதலியை கொலை செய்து விட்டு உடலை புதைத்து விட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் டி நரசீபுரா தாலூகாவின் தலக்காடு காவேரி நிசர்கதாமாவில் நடந்துள்ளது. டி நரசீபுரா தாலூகாவின் எம் கெப்பேஹூண்டி கிராமத்தை சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா இறந்து போன காதலர்கள். சித்தராஜு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட இடத்திலேயே சுமித்ராவின் உடலை புதைத்து வைத்துள்ளான். சில ஆண்டுகளாக சுமித்ரா மற்றும் சித்தராஜு இருவரும் கள்ள தொடர்பு வைத்திருந்தனர். கடந்த சனிக்கிழமை சித்தராஜு சுமித்ராவுடன் தலக்காடிற்கு சென்றுள்ளான். அப்போது சித்தராஜு சுமித்ராவை கொலை செய்து உடலை புதைத்து விட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுதான். சம்பவ இடத்திற்க்கு தலக்காடு போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்டுள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.