காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு இளைஞர் தற்கொலை

பெங்களூர்:ஜூன். 19 – இளம் பெண் ஒருவளை காதலிக்க பெற்றோர் ஒப்புகொள்ளாதாதால் மனம் நொந்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சிக்கபள்ளாபுரா தாலூகாவின் தேசிய நெடுஞசாலை அருகில் உள்ள ஷெட்டிகெரே வன பகுதியில் நடந்துள்ளது. பாகேபள்ளி தாலூகாவின் பிச்சளவாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சு நாயக் (24) தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டவன். சிறு வயது மற்றும் ஜாதி விட்டு ஜாதி சிறுமியை மஞ்சு காதலித்து வந்துள்ளான் இதனால் இரண்டு பேரின் பெற்றோரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வருத்தமடைந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே வீட்டில் தற்கொலை செய்து கொள்ள இளைஞன் முயற்சித்துள்ளான் . அந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் அவனை காப்பாற்றியுள்ளனர். இது நடந்த பின்னர் வேலைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு தேசிய நெடுஞசாலை பக்கத்தில் உள்ள மரத்தில் மஞ்சு நாயக் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளன. பீரேசந்திரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.