காதலுக்கு மறுப்பு: இளம்பெண் கழுத்து அறுத்து கொலை

பெங்களூர்: செப்டம்பர். 13 – காதலை நிராகரித்த காரணத்திற்க்காக ஆத்திரமடைந்த இளைஞன் ஒருவன் இளம்பெண்ணை கத்தியால் அவளுடைய கழுத்தில் அறுத்து அதோடு நில்லாமல் தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சென்னப்பட்டணாவில் இன்று நடந்துள்ளது. சென்னப்பட்டணாவில் தனியார் மொபைல் ஷோ ரூமில் பணியாற்றிவந்த ராம்நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவன் இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளவன் . சென்னப்பட்டணாவில் உள்ள மொபைல் ஷோ ரூமில் வெங்கடேஷ் மற்றும் இளம் பெண் இருவரும் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது இளம்பெண்ணை காதலிக்க தொடங்கிய வெங்கடேஷ் இளம் பெண்ணுடன் பலமுறை தன காதலை தெரிவித்துள்ளான். ஆனால் இளம் பெண் இவனுடைய காதலை நிராகரித்துள்ளாள். இந்த நிலையில் இன்று சென்னப்பட்டணாவில் உள்ள வரதராஜசாமி கோயில் அருகே உள்ள இளம் பெண்ணின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்று தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளான் . அப்போது இளம் பெண் மிகவும் கண்டிப்பாக இவனுடைய காதலை ஏற்க மறுத்துள்ளாள். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியால் அறுத்துள்ளான் . பின்னர் தானும் அதே கத்தியால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளான். இளம் பெண் தற்போது உயிராபத்திலிருந்து தப்பியிருப்பதுடன் வெங்கடேஷுக்கு அதிக ரத்த சோகை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் சிகிச்சைக்காக மண்டியா அரசு மருத்துவமனையில் சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.