காதலை நிராகரித்தகாதலி – காதலன் தற்கொலை

பெங்களூரு, மார்ச்.19-
ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த இளம்பெண் திடீரென தனது காதலை வேண்டாம் என மறுத்து விட்டதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. ஆனேக்கல் தாலுகா ஹூலிமங்கல் அருகே உள்ள நஞ்சப்பூரில் இந்தத் துயர நடந்துள்ளது. கையில் பிளேடால் அறுத்துக் கொண்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர்
ஹர்ஷித். இளம்பெண்ணின் தாய் மற்றும் உறவினர்களால் இளைஞன் துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்திரகுமார், ராதா தம்பதியின் மகனான ஹர்ஷித், தும்கூரை சேர்ந்த மிருதுளா யானே மேக் என்பவரை காதலித்து வந்தார். ஆனேக்கல் ஏஎஸ்பி கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் இல்லாத மிருதுளா, தாய் மற்றும் மாமா வீட்டில் வசித்து வந்தார். இவரின் காதல் விவகாரம் வீட்டினருக்கு தெரிய வரவே இனி நீ காதலிக்க கூடாது என்று காதலனை மிரட்டி உள்ளனர். இளம் பெண்ணும் அவரது வீட்டில் உள்ளவர்களால் அடித்து காயம் படுத்தப்பட்டார். இதனால் இளம்பெண் ஹர்ஷித்தின் காதலை நிராகரித்துள்ளார்.
இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹர்ஷித்துக்கு போன் செய்து மிருதுளாவை திருமணம் செய்து கொள்வதாகவும், நீ அவள் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஹர்ஷித், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிளேடால் கையை அறுத்து, அதை படம் பிடித்து, தாயின் மொபைல் போன் எண்ணுக்கு, வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதை பார்த்த தாய், தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கைகளை அறுத்துக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இளம் பெண் மிருதுளா என்ற மேகா, அவரது மாமி கவிதா, மாமா மற்றும் தெரியாத எண்ணில் இருந்து அழைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெப்பகொடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.