காதல் ஜோடி உள்பட 8 பேர் தற்கொலை

விஜயநகர், ஜன.19- தூக்குப்போட்டு தற்கொலை விஜயநகர் மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா நீலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் வீரேஷ். இவரது மனைவி பவ்யா (வயது 36). இந்த தம்பதியின் மகள்கள் காவ்யா (14), அமுல்யா (10). இந்த நிலையில் வீரேசுக்கும், பவ்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் பவ்யாவிடம் கோபித்து கொண்டு வீரேஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பவ்யா நேற்று தனது மகள்கள் காவ்யா, அமுல்யாவுடன் சேர்ந்து ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோல விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா ஜெய்னாபுரா கிராமத்தில் வசித்து வந்தவர் ராகேஷ் (21). இவரும் சாவித்ரி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். ஆற்றில் குதித்து…. ஆனால் காதலுக்கு இருகுடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த ராகேசும், சாவித்ரியும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறினர். நேற்று காலை கிராமத்தில் உள்ள மரத்தில் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபோல பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து தாலுகா கமதகி கிராமத்தில் வசித்து வந்த உமா (42) என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மகள்களான ஐஸ்வர்யா (23), சவுந்தர்யா (19) ஆகியோருடன் சேர்ந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.