காதல் விவகாரத்தில் இளைஞர் கொடூர கொலை – குற்றவாளிகள் கைது

பெங்களூர் : அக்டோபர் . 17 – நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கடந்த அக்டோபர் ஐந்து அன்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞன் லோகேஷ் என்பவனை கடத்தி சென்று கொலை செய்துவிட்டு தலைமறைவாயிருந்த விவகாரத்தை விசாரணை மேற்கொண்ட மாதநாயக்கனஹள்ளி போலீசார் தற்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என்பதை கண்டுபிடித்துள்ள போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து மிகவும் சவாலாக இருந்த வழக்கை முடித்துள்ளனர். தவிர போலீஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் பெற்றிருப்பதுடன் ரொக்க பரிசும் வென்றுள்ளனர். பொறியியல் டிப்ளமா முடித்திருந்த டாவணகெரேவை சேர்ந்த இளைஞன் லோகேஷ் பீன்யா அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளான் . இதே நிறுவனத்தில் சிக்கபள்ளாபுராவை சேர்ந்த பிரதாப் (22) மற்றும் 22 வயது இளம்பெண் ஒருவரும் வேலை செய்து வந்தனர். பிரதாப் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளான் . இளம் பெண்ணுக்கு பிரதாப் சிறு வயதிலிருந்தே அறிமுகமாகியிருந்தாள் . தான் வேலை செய்த நிறுவனத்திலேயே அவளுக்கும் வேலை வாங்கி கொடுத்துள்ளான். இதற்கிடையில் அதே நிறுவனத்தில் வேலை செய்த லோகேஷின் அறிமுகம் பெண்ணுக்கு கிடைத்துள்ளது . இந்த அறிமுகம் நட்பாக மாறி பின்னர் அதுவே காதலாகவும் மாறியுள்ளது. இவர்களின் காதல் விவகாரம் பற்றி அறிந்த பிரதாப் லோகேஷ் மீது பகைமை kaata துவங்கினான் . இதே விஷயமாக பிரதாப் மற்றும் லோகேஷுக்கிடையே இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெரிய கலாட்டா நடந்துள்ளது. இதற்கு பழி வாங்க பிரதாப் காத்திருந்தான். அதன்படி கடந்த அக்டோபர் 5 அன்று வேலை முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த லோகேஷை நாகசந்திரா மெட்ரோ ஸ்டேஷன் அருகில் பிரதாப் மற்றும் அவனுடைய நண்பன் மஞ்சுநாத் என்ற மஞ்சா (22) லோகேஷை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சி அருகில் இருந்த சி சி டி வியில் பதிவாகியிருந்தது . அதே வேளையில் மருமகன் வீட்டுக்கு வராததால் ஆதங்கம் அடைந்த லோகேஷின் மாமனார் பாகல்குண்டே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கடத்தல் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் 8ந்தேதி அன்று பெங்களூர் கிராமாந்தர மாவட்டத்தின் நெலமங்களா குக்கனஹள்ளி கிராமத்தின் எல்லப்பா என்பவரின் நிலத்தில் அடையாளம் தெரியாத உடல் கிடைத்த நிலையில் உடலின் மீது கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது . இதை பார்த்த மாதநாயக்கனஹள்ளி போலீஸ்வர் 302 பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகசந்திரா அருகில் லோகேஷ் என்பவன் கடத்தப்பட்ட விஷயம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் லோகேஷின் புகைப்படத்தை தருவிக்கின்றனர். பின்னர் லோகேஷின் மாமனாரை அழைத்துக்கொண்டு விக்ட்டோரியா மருத்துவமனையில் இருந்த உடலை அடையாளம் காண செல்கின்றனர். அப்போது லோகேஷின் மாமனார் லோகேஷின் உடலை உறுதி செய்கிறார். பின்னர் உடனே நடவடிக்கையில் இறங்கிய போலீசார் லோகேஷ் வேலை செய்த நிறுவனத்தின் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்த சி சி டி விக்கலை சோதனை செய்தனர். அப்போது குற்றவாளிகளின் அடையாளம் தெரியவந்தது. லோகேஷ் குறித்து அவனுடைய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது குற்றவாளி பிரதாப் மற்றும் லோகேஷுக்கிடையே இருந்த பகை குறித்து தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் குற்றவாளிகளின் இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது இவர்கள் சிட்லகட்டாவில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது . உடனே அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது கொலை செய்ததை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். indha கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்த மாதநாயக்கனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளீதர் சப் இன்ஸ்பெக்டர் பிரஷாந்த் மற்றும் ஊழியர்களுக்கு பெங்களூர் க்ராமந்தர மாவட்ட எஸ் பி மல்லிகாஜுனா பார்ட்டுக்கள் தெரிவித்துள்ளார்.