காதல் விவகாரம்: பெங்களூரைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை

பெங்களூரு, டிச. 19: பெங்களூரைச் சேர்ந்த 2 பேர் காதல் விவகாரத்தில் ஹுப்பள்ளியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் அவரது மைத்துனி திங்கள்கிழமை நகரின் மொரார்ஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
லோகேஷ் ராவ் (35), சாந்தி (26) ஆகியோர் தற்கொலைச் செய்து கொண்டவர்கள். இவர்கள் பெங்களூரிலிருந்து ஹூப்பள்ளிக்கு வந்து ஆட்டோரிக்ஷாவை வாடகைக்கு எடுத்தனர். பணம் தீர்ந்துவிட்டதாக ஆட்டோ டிரைவரிடம் கூறி, 2 மணி நேரம் லாட்ஜில் இறக்கிவிட்டு திரும்பும்படி கூறினர்.
இருப்பினும், ஓட்டுநர் அவர்களை தனது வீட்டில் 2 மணி நேரம் தங்க அனுமதித்தார். டிரைவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டனர். லோகேஷ் தனது மனைவி பார்வதியின் சகோதரியான சாந்தியுடன் காதல் கொண்டிருந்தார். இதற்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இது குறித்து லோகேஷ்ராவின் மனைவி பார்வதி பழைய ஹுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்