கான்கிரீட் மற்றும் குப்பை மயமான பெங்களூர் ஏரிகள்

பெங்களூர் : மார்ச். 18 -கர்நாடக மாநில தலைநகரில் நீர் ஆதாரமாய் விளங்கும் பகுதிகள் கான்க்ரீட் மயமாக்கப்பட்டதுடன் ஏரிகளில் நீர் சுரப்பும் குறைந்துள்ளது . மழைநீர் கால்வாய் கழிவு தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் ஆகியவை மண்டிப்போய் ஏரி மொத்தமும் கலப்படமாகியுள்ளது. இது தண்ணீர் ஆதாரம் மீது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது . சுமார் 98 சதவிகித ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டிருப்பதுடன் ஏரிகள் சேற்று நீரால் நிரம்பியுள்ளன . இப்படி சீரழிந்துள்ள ஏரிகளின் தோராய ,மதிப்பு 9418 கோடிகள் என இந்திய விஞ்ஞான ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. உலக நிறுவனமான சிஸ்டெம் ஆப் என்விரான்மென்டல் எகனாமிக்ஸ் அகௌண்ட்டிங்க் குறித்து அமைத்துள்ள மாதிரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பேராசிரியர் டி வி ராமச்சந்திரா தலைமையிலான ஐ ஐ எஸ் சி ஆய்வாளர்கள் பெங்களூரு ஏரிகள் அமைப்பு ( பி எல் ஐ எஸ் ) என்ற விஞ்ஞான ரீதியிலான மாதிரியை அறிவித்திருப்பதுடன் அதில் ஏரிகள் கலப்பாடமாகுமளவிற்கு அவற்றின் பொருளாதார மதிப்பு குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது ஜாக்கூர் மற்றும் ராசேனஹள்ளி அசுத்தமடையாமல் சகஜ நிலையில் இருந்த காலத்தில் தினசரி ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு கொண்டிருந்தது. அதுவே இப்போது கலப்படமடைந்து அசுத்தமாகியுள்ளதன் விளைவாய் ஒவ்வொரு ஹெக்டேருக்கு தினசரி 20 ரூபா மதிப்பிழந்து வருகிறது . இதன் வாயிலாக 99.8 சதவிகித பொருளாதார மதிப்பை ஏரிகள் இழந்துள்ளன . இப்படி பொருளாதார மதிப்பை இழத்தல் அனைத்து ஏரிகளுக்கும் பொருந்தும். என இந்திய விஞ்ஞான ஆய்வு கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்னர். பெங்களூர் ஊரக மாவட்டங்களில் 70 சதவிகித ஏரிகள் காணாமல் போயுள்ளன. பூங்கா நகரான பெங்களூரில் இப்போது சிமெண்ட் வனமாகி வரும் அதே வேளையில் நீரின் மூலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன. இதனால் ஏரிகள் இயற்கையாகவே சுற்றசூழல் தூய்மைக்கு தரும் பங்களிப்பு மற்றும் ஏரியின் உப பொருள்களிலும் பல வித்யாசங்கள் தென்பட்டுவருகின்றன. சுற்ற சூழல் தூய்மைக்கு ஏரிகள் அளித்து வரும் சேவைகள் மற்றும் கலாச்சார முக்யத்வம் ஆகியவற்றை கணக்கிடுவதன் வாயிலாக மற்றும் இந்த மூன்று அம்சங்களையும் ஒன்று சேர்த்து ஏரிகள் சுற்றசூழல் தூய்மைக்கு அளிக்கும் பங்கை பொருளாதார ரீதியில் கணக்கிடப்படுகிறது. ஏரிகள் கலப்ப ட மில்லாமல் தூய்மையாக இருந்தால் அவை ஆண்டொன்றுக்கு அளிக்கும் மொத்த சேவைகளின் மதிப்பு 365 கோடிகளாகும் . என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது 6 கால்வாய்கள் , 193ஏரிகள் அளித்துவரும் சேவைகள் மற்றும் பொருளாதார மதிப்பீட்டை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வு நடத்தி வந்துள்ளனர் . இதில் சின்னார் , கே சி கால்வாய் , சுவர்ணமுகி , அர்காவதி , வ்ருஷபாவதி , ஹெப்பாள் நாகவாரா ஆகியவற்றுடன் தொடர்புள்ள 200 நீர் மூலங்களில் 193 ஏரிகளையும் பரிசீலனை நடத்தியுள்ளனர்.