காய்கறி மூட்டைகளில் மதுபானம் கடத்தல்

பெங்களூரு, ஜூன் 9- மினி லாரிகளில் காய் மூட்டைகள் அடியில் வைத்து தமிழ் நாட்டிற்கு மதுபானங்களை கடத்திய இரண்டு பேரை மேற்கு பகுதி போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையின் அருணாபேட்டையை சேர்ந்த ராமகிருஷ்னன் (21) மற்றும் ராஜ்குமார் ((27) ஆகியோர் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள். என டி சி பி டாக்டர் சஞ்சீவ் பாட்டில் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 59 கேஸ் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளி ராமகிருஷ்னன் மினி லாரி ஓட்டுநராவார் . . குற்றவாளிகள் காய் மூட்டைகளில் அடிப்பகுதிகளில் மதுபான பெட்டிகளை ஒளித்து வைத்து தமிழ் நாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். சிட்டி மார்க்கெட் அருகில் சோதனை சாவடி அருகில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த மினி லாரியை மடக்கி இன்ஸ்பெக்டர் குமாரசுவாமி சோதனை செய்த போது காய் மூட்டைகள் கீழ்ப்பகுதியில் ஒளித்து வைத்திருந்த 59 பெட்டிகளில் 509 லிட்டர் மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்து விசாரித்த போது கடந்த சில நாட்களாக மது பானங்களை கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளதாக சந்தீப் பாட்டில் தெரிவித்தார்.