
பாட்னா: நவம்பர் 5-
பீகார் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. நேற்று வெளியான ஜேவிசி அமைப்பின் கருத்துக் கணிப்பின்படி, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இக்கூட்டணி 120 முதல் 140 இடங்களை வெல்லக்கூடும் என இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதேசமயம், மகாகத்பந்தன் (MGB) எனப்படும் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணி 93 முதல் 112 இடங்களை மட்டுமே பெறக்கூடும். அங்கே மெஜாரிட்டி பெற 122 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. இதற்கு வருகிற நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது. காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியின் 39% முதல் 41% வரையிலான வாக்கு சதவீதத்தை விட சற்றே அதிகமாகும். பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன சூராஜ் கட்சிக்கு 6% முதல் 7% வாக்குகள் கிடைக்கும் என்றும், மற்ற பிராந்திய கட்சிகள் சுமார் 10% முதல் 11% வாக்குகளைப் பெறலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. Powered By 2 இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி (BJP) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 70 முதல் 81 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 42 முதல் 48 இடங்களையும் கைப்பற்றும். லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 முதல் 7 இடங்களையும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) இரண்டு இடங்களையும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஒன்று அல்லது இரண்டு இடங்களையும் பெற வாய்ப்புள்ளது.பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் 2026ல் விஜய் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பெரும்பாலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முக்கியமாக கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தேர்தல் முடிவுகளை வெகுவாக பாதிக்கும். முக்கியமாக 2-5 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பலர் தோல்வியை தழுவும் வாய்ப்புகள் உள்ளன. இதே அரசியலைத்தான் இந்த பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளை அவர் வெகுவாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















