கார்கிலில் வெடி விபத்து 3 பேர் பலி

ஜம்மு, ஆகஸ்ட் 19-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டம் த்ராஸில் உள்ள குஜூரி கடையில் மர்மமான முறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர்.
குஜூலி கடையில் வைக்கப்பட்டிருந்த ஷெல்லில் இருந்து உலோகத்தை பிரித்தெடுக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டது. கடை உரிமையாளரின் மகன் மற்றும் அந்தப் பக்கமாக சென்ற இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த மூவரில் இருவர் கண்டியலைச் சேர்ந்த ஷபீர் அகமது (30) மற்றும் ஜம்முவின் நர்வாலைச் சேர்ந்த சுமார் 12 வயதுடைய ஸ்கிராப் கடை உரிமையாளரின் மகன் ஹனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திராஸின் பிரதான சந்தையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்