கார்கே உடன் தமிழக காங்கிரஸ் குழு சந்திப்பு

பெங்களூர் ஆக.18-
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று பெங்களூரில் சந்தித்து பேசினர். தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி தொடர வலியுறுத்தினர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துள்ளார். 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய குழு சந்தித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவும் நிலையில் கே.எஸ்.அழகிரி சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரியே தமிழக காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.