கார் கவிழ்ந்து திருப்பதிக்கு சென்ற 4 பேர் பலி

ஹாவேரி, மே 24: ஹாவேரி மாவட்டம் ரானேபென்னூர் அருகே கார் கவிழ்ந்ததில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த‌ பக்தர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சுரேஷ் வீரப்ப ஜாடி (45), ஐஸ்வர்யா எரப்பா பார்கி (22), சேதனா பிரபுராஜா சமகண்டி (7), பவித்ரா பிரபுராஜா சமகண்டி (28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த சன்னவீரப்பா ஜாடி, சாவித்ரா ஜாடி, விகாஷா ஹொன்னப்பா பார்கி, ஹொன்னப்பா நீலப்பா பார்கி, பிரபுராஜா எரப்பா சமகண்டி, கீதா ஹொன்னப்பா பார்கி ஆகியோர் தாவணகெரேவில் உள்ள‌ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், ஹாவேரியில் இருந்து திருப்பதிக்கு இறைவனை தரிசிக்க காரில் சென்ற குடும்பம் பயங்கர விபத்தில் சிக்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ரானேபென்னூர் ஹாலகேரி பைபாஸ் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. தேசிய நெடுஞ்சாலை 4 இல் பிபி சாலையில் சென்று கொண்டிருந்த கார், சர்வீஸ் சாலையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்ததும் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.