கார் கவிழ்ந்து பற்றி எரிந்தது 3 பேர் உயிர் தப்பினர்

பெங்களூர் : நவம்பர் . 24 – மூக்கு முட்ட குடித்து தாறுமாறாக ஓட்டிவந்த கார் நிலை தடுமாறி கவிழ்ந்து வீழ்ந்து தீ பிடித்துள்ள சம்பவம் ராம்நகர் தாலூகாவின் தொட்டகங்கவாடி என்ற கிராமத்தின் அருகில் நடந்துள்ளது. ஆனால் காரில் இருந்த மூன்று பேர் காரில் இருந்து உடனடியாக இறங்கி உயிர் தப்பியுள்ளனர் . பெங்களூருவை சேர்ந்த ரோஹித் , தருண் , மற்றும் மஞ்சு ஆகியோர் இந்த விபத்தில் உயிர் தப்பியவர்கள். இவர்கள் மூன்று பேரும் மூச்சு முட்ட குடித்து கிராமத்தின் வீதிகளில் காரை தாறுமாறாக ஒட்டி வந்துள்ளனர். தவிர கிராமத்தில் ஒருவர் மீது மோதியிருப்பதுடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போது கார் கவிழ்ந்து விழுந்து உடனே தீ பற்றி எறிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காருக்குள் இருந்த மூன்று பேரையும் வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ராம்நகர் கிராமாந்தர போலீசார் மூன்று இளைஞர்களையும் தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள சம்பவம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி தாலூகாவின் உஜிரேவில் உள்ள கல்லூரி சாலையில் நடந்துள்ளது . எஸ் டி எம் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா படித்துவந்த தர்மஸ்தலா கிராமத்தின் நேத்ராவதியை சேர்ந்த தீக்ஷித் (20) என்பவன் இந்த விபத்தில் இறந்த மாணவன். இந்த விபத்து குறித்து பெல்தங்கடி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.