கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

மாண்டியா, மார்ச் 12-
பெங்களூர் – மைசூர் அதிவிரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்த ஒரே நாளில் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார், மாண்டியா மாவட்டம் மத்தூர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகே கவிழ்ந்தது. பெங்களூருவில் இருந்து மைசூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேரிகார்டில் மோதி கவிழ்ந்தது.
கவிழ்ந்த காரில் இருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.