கார், சிமென்ட் லாரி நேருக்கு நேர்மோதல்: 4 பேர் உயிரிழப்பு

விஜயபுரா, ஏப். 13: பாபலேஷ்வர் தாலுகா அர்ஜுனகி கிராமம் அருகே வேகமாக வந்த காரும், சிமென்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விஜயப்பூரில் இருந்து ஜமகண்டி நோக்கிச் சென்ற காரும், ஜமகண்டியில் இருந்து விஜயப்பூர் நோக்கி, சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதியதில், 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
விஜயபூரைச் சேர்ந்த அர்ஜுன குஷாலசிங் ராஜ்புத் (32), ரவிநாத் சுனிலால் பட்டாரா (52), புஷ்பா ரவிநாத் பட்டாரா (40), மேகராஜா அர்ஜுனசிங் ராஜ்புத் (12) ஆகியோர் காரில் விஜயாபூரில் இருந்து ஜமகண்டி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்ததும் உடனடியாக பாபலேஷ்வர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.