கார் டிரைவரை ஒரு கி.மி. தூரம் பைக்கில் இழுத்து சென்ற நபர்

பெங்களூரு,ஜன.17-
கர்நாடகாவின் பெங்களூரு நகர் தகவல் தொழில் நுட்ப நகரம் என்ற பெருமையை கொண்டது. எனினும், மழை காலங்களில் நீர் தேங்கி, வடிந்து செல்ல வழி இல்லாமல் ஐ.டி. ஊழியர்கள் டிராக்டரில் சென்ற அவலமும் ஏற்பட்டது. இதுபோன்ற வித்தியாச நிகழ்வுகள் அவ்வப்போது பெங்களூருவில் காணப்பட்ட நிலையில், இன்று மதியம் நடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின் கார் மீது மோதி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய கார் ஓட்டுனர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் நிற்காமல் தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்கும் நோக்கில், முயன்று முடிவில் அவரது பைக்கின் பின் பகுதியை கார் ஓட்டுனர் பிடித்துள்ளார். இதனால், வழியெங்கும் அவரை இழுத்து கொண்டே பைக்கில் சென்றவர் பயணித்து சென்றுள்ளார். இதன்பின்பு, மற்றொரு பைக்கில் வந்த நபர் ஒருவர் மற்றும் ஆட்டோவில் வந்தவர் உதவியுடன் அந்த பைக் நிறுத்தப்பட்டது. பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நபரின் ஆடைகள் கிழிந்து இருந்தன. Also Read – நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு நடந்த 2-வது திருமணம்; புதுப்புது தகவல்கள் அவர் மெதுவாக எழுந்து வந்துள்ளார். இதுபற்றிய வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் ஓட்டுனர் முத்தப்பா (வயது 55) என தெரிய வந்துள்ளது. அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். பைக் ஓட்டி சென்றவரை பிடித்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பைக் ஓட்டி சென்றவருக்கும், சாலையில் வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.