கார் பஸ் மோதல் 4 பேர் பலி

மண்டியா : செப்டம்பர். 27 – வேகமாக சென்றுகொண்டிருந்த கார் முன்னாள் சென்றுகொண்டிருந்த கே எஸ் ஆர் டி சி பஸ் மீது மோதியதில் இடத்தில் பெங்களூரை சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் இறந்துள்ள சோக சம்பவம் நாகமங்களா தாலூகாவின் பெல்லூரு க்ராஸ் அருகில் பெங்களூர் -மங்களூர் நெடுஞசாலையில் நடந்துள்ளது.
பெங்களூரின் பெண்டிகானஹள்ளியை சேர்ந்த நமிதா , மற்றும் பெங்களுரில் வசித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் ஷர்மா , பெங்களூரை சேர்ந்த வம்சி கிருஷ்ணா மற்றும் தார்வாடை சேர்ந்த ரகுநாத் பஜந்த்ரி ஆகியோர் இந்த விபத்தியல் உயிரிழந்தவர்கள்.
ஹாசன் மார்கத்திலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த கார் எதிரில் சென்றுகொண்டிருந்த கே எஸ் ஆர் டி சி பஸ் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் விளைவால் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இதன் விளைவாக காரில் பயணித்த நான்கு பெரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். அதிக வேகமே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.விபத்து நடந்த இடத்திற்கு பெல்லூர் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் உடல்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்