பெங்களூர் : அக்டோபர் . 13 – ஓடிக்கொண்டிருந்த காரின் மீது பின்னாலிருந்து மோட்டார்சைக்கிளால் மோதி காரை சேதப்படுத்தியிருப்பதுடன் கார் ஓட்டுனரிடமிருந்து பணத்தை அபகரித்த நான்கு குற்றவாளிகளை வொயிட் பீல்டு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜபாள்யா பகுதியை சேர்ந்த கே பி விஷ்ணு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தீப் மற்றும் ஹரீஷ் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக டி சி பி சஞ்சீவ் பாட்டில் தெரிவித்துள்ளார். . தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த விஷ்ணு கடந்த செப்டம்பர் 21 அன்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்ல வர்த்தூரு கோடி அருகில் வந்துகொண்டிருந்தபோது சந்தீப் மற்றும் அவனுடைய கூட்டாளி மற்றொருவன் குடி போதையில் மோட்டார் சைக்கிளை ஓடிவந்து விஷ்ணு காரின் பின்பகுதியில் மோதி சேதப்படுத்தியிருப்பதுடன் காரின் பேனட் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர் . பின்னர் காரை ஓட்டிவந்தவரிடம் தகாதவார்த்தைகளால் திட்டியிருப்பதுடன் அவரிடமிருந்து பணத்தையும் வசூலித்துள்ளனர் . அவருடைய பாக்கெட்டில் இருந்த பர்ஸை அபகரித்து பார்த்தபோது அதில் பணம் இருக்கவில்லை . பின்னர் மேலும் தங்கள் கூட்டாளிகள் இரண்டு பேரை தருவித்து ஓட்டுனரின் போனை பலவந்தமாக அபகரித்து போன் பே வாயிலாக 6 ஆயிரம் ரூபாய் அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர் . இது குறித்து கார் ஓட்டுநர் சமூகவலைதளங்களில் பரவ விட்டுள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த உடன் விஷ்ணுவிடமிருந்து விவரங்களை பெற்று வழக்கு பதிவு செய்துகொண்ட போலீசார் நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் . கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் நான்கு பேரும் வர்த்தூர் அருகில் உள்ள ராம்கொண்டகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் . இவர்கள் நால்வரும் குடி போதையில் இந்த செயலில் ஈடுபட்டிருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது . இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு எதிராக எந்த குற்றவியல் வழக்கும் பதிவாகவில்லை என்ற நிலையிலும் தற்போது இவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளதாக டி சி பி சஞ்சீவ் பாட்டில் தெரிவித்துள்ளார்.