கார் மீது லாரி கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

ரேபரேலி, ஜூலை . 20 -உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் படோகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரேபரேலி-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்ற கரி சாம்பல் ஏற்றிய லாரி ஒன்று காரை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதில், திடீரென கார் மீது லாரி கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களது உடல்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளன. அவர்கள் உணவு விடுதி ஒன்றிற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு காரில், வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.